34.ULLE.TEST

30.Dr.IDA SCUDDER-1
31.Dr.IDA SCUDDER-2
32.SARA TUCKER COLLERE
33.ISABELLA THOBURN COLLEE
34.CHRISTIAN COLLEGES
36.

21

30

IDA.S.SCUDDER-
9/12/1870-23/05/1960
ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்

மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை

நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

இளமைப்பருவம்
இவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட்

ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள்

இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த

காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு

வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன்

பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத்

தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில்

உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து

படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை

சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.

அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள்

தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை

பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர்

இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார்

ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர்.

மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய

சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.

இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம்

படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம்

தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர்,

பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு

முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற

எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க

டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல்

என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை

ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக,

வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர்

உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.

வேலூரில் மருத்துவமனை:
தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா.

இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே

மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது

படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை

தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக்

நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.

அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப்

பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப்

பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில்

உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908

இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து

மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.

மருத்துவக் கல்லூரி
1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று

டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின்

எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில்

பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே

முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி

தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.

1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல்

உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா

திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத்

விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன்
பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை
மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918
ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர்
பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி,
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான்,
பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.
விருதுகள்:
அம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற
பொற்பதக்கத்தை அளித்தது.
அமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ்
என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.
மறைவு:
1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் தம் தொண்ணூறாவதுவயதில்
இயற்கை எய்தினார்.
IDA.S.SCUDDER

31.

டாக்டர் ஐடா ஸ்கடர்
(09/12/1870-23/05/1960)

இந்திய மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முன்னோடி பாதையை ஏற்படுத்திக்கொண்ட வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College), சமீபத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. பல்வேறு தடைகளையும் தடங்கல்களையும் கடந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டுப் பயணத்தில் டாக்டர் ஐடா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்ணின் பங்களிப்பு முதன்மையானது. சொல்லப்போனால் இந்தக் கல்லூரி, ஐடாவின் சாதனை என்பதில் சந்தேகமில்லை. சி.எம்.சி-யின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் அடித்தளமாக டாக்டர் ஐடா ஸ்கடர் எப்போதும் திகழ்கிறார்.

பஞ்சமும் பட்டினியும்

ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் சுகாதாரம் பின்தங்கி இருந்தது. அப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 வயதுதான். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகவே இருந்தது. 1877-ல் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவு மட்டும் கிட்டத்திட்ட 50 லட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு, ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியாத நிலையே இருந்தது.

அந்தக் காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை அளிப்பது, உணவு வழங்குவது போன்ற பணிகளைச் செய்துவந்தன. அப்படி இந்தியா வந்தவர்களில் டாக்டர் ஜான் ஸ்கடரும் ஒருவர். பஞ்சத்தால் ஏற்பட்ட கோரக் காட்சிகளைத் தினமும் பார்த்த ஜானின் ஏழு வயது சிறுமி, இனி இந்தியாவுக்கு வரக் கூடாது என்றும் மிஷனரி பணியில் ஈடுபடக் கூடாது என்றும் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்தச் சிறுமிதான் மருத்துவ உலகின் சிறந்த கல்லூரி ஒன்றைப் பின்னாளில் தொடங்கினார்.

மூன்று அழைப்புகள்

டாக்டர் ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடரின் மகளாக 1870 டிசம்பர் 9-ம் தேதி ராணிப்பேட்டையில் ஐடா ஸ்கடர் பிறந்தார். மிஷனரி பணியில் தங்களை முழுமையாக ஈடுபட்ட தன் குடும்பத்தினரின் வழியில் செல்ல ஐடாவுக்கு அப்போது விருப்பமில்லை. அமெரிக்கா திரும்பிய ஸ்கடர், படிப்பில் கவனம் செலுத்தினார். ஐடாவின் பெற்றோர் மட்டும் இந்தியாவில் மிஷனரி பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களைப் பார்க்க மீண்டும் இந்தியா வரவேண்டிய கட்டாயம் ஐடாவுக்கு ஏற்பட்டது.

அந்தப் பயணம் ஐடாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. வேலூரில் மிஷனரி பணியில் ஈடுபட்டிருந்த பெற்றோருடன் சிறிது காலம் அவர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார். அப்போது ஐடாவுக்கு 14 வயது. ஒரு நாள் இரவு வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஐடா கதவைத் திறந்தார். வாசலில் நின்றிருந்த ஓர் இளம் அந்தணரின் முகத்தில் படபடப்பும் பதற்றமும் காணப்பட்டன.

ஐடாவைப் பார்த்ததும் அவர்தான் மருத்துவர் என நினைத்த அந்தணர், “அம்மா, கர்ப்பிணி மனைவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நீங்கள்தான் வந்து என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். அவளுக்கு 14 வயதுதான் ஆகிறது” என்று மூச்சுவிடாமல் சொன்னார்.

ஐடாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் மருத்துவர் இல்லை என்று சொல்லிவிட்டு மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார். “ஐயோ, ஆண் மருத்துவரா, வேண்டாமம்மா. எங்கள் குல வழக்கம் இதற்கு இடம் தராது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். இந்த முறை வாசலில் நின்றுகொண்டிருந்தவர் ஓர் இஸ்லாமியர். தன் மனைவிக்குப் பிரசவம் பார்க்கும்படி ஐடாவிடம் அவர் சொன்னார். தன் தந்தைதான் மருத்துவர் என்ற ஐடாவின் பதிலைக் கேட்டதும், அந்தணரைப்போல் இவரும் வேண்டாமென்று சென்றுவிட்டார்.

அறைக்குத் திரும்பிய ஐடாவுக்குக் குழப்பம். இந்தியச் சமூகக் கட்டமைப்பு ஏன் இப்படி இருக்கிறது என யோசித்தார். மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். கண்கலங்கியபடி நின்றிருந்தவரும் தன் மனைவிக்குப் பிரசவம் பார்க்க அழைக்கிறார் என்பதை ஐடா தெரிந்துகொண்டார். ஆண் மருத்துவரை மறுத்த அவர், விதியின் மீது பழியைப் போட்டுவிட்டுச் சென்றார்.

சிறுமியின் முடிவு

மூன்று விதமான ஆட்கள், ஒரே காரணத்துக்காக அழைக்கிறார்கள் என்பதை நம்ப முடியாமல் தனக்குள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டார் ஐடா. அவர் மனதுக்குள் ஒரு போராட்டம் நடந்தது. தனக்குத்தான் மருத்துவம் தெரியாதே, பின் எப்படி மருத்துவம் பார்க்க முடியும் என்ற பதிலையும் அவரே சொல்லிக்கொண்டார். மனப் போராட்டத்துக்கு நடுவே அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் மூன்று பெண்களின் சவ ஊர்வலம் செல்வதை ஐடா பார்த்தார். இரவில் மருத்துவ உதவி கேட்டு வந்த மூன்று ஆண்களின் மனைவிகளும் இறந்ததை ஐடாவால் நம்ப முடியவில்லை. ஒருவித குற்றவுணர்வு அவரை ஆட்கொண்டது. தனது எதிர்காலத்துக்கான விடையை அப்போது அவர் கண்டுகொண்டார்.

மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக ஐடா தெரிவிக்க, அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம். காரணம் தந்தை ஜான் ஸ்கடர் (ஜூனியர்), தாத்தா ஜான் ஸ்கடர் (சீனியர்) இருவருமே மருத்துவர்கள். தவிர ஐடாவின் தாத்தா டாக்டர் ஜான் ஸ்கடர், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மிஷனரி பணிக்காக வந்த முதல் மருத்துவரும்கூட!

மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும் ஐடாவின் மிஷனரி பணிக்குத் தோழி ஆனி ஹான்காக் உதவினார். வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஐந்து, பத்து அமெரிக்க டாலராகச் சேர்க்கும் நிதியால் இலக்கை எட்ட முடியுமா என்ற அச்சமும் ஐடாவுக்கு இருந்தது.

Ida scudder ஐடா ஸ்கடர் எதிர்பாராத உதவி

ஒரு நாள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றின் தலைவியாக இருந்த டேபர் என்பவரைச் சந்திக்கச் சென்றார். டேபருடன் ஷெல் என்ற முதியவரும் இருந்தார். முதியவரை அங்கேயே இருக்குமாறு கூறிய டேபர், அடுத்த அறைக்கு ஐடாவை அழைத்துச் சென்றார். இந்தியாவில் நிலவும் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் ஐடா விளக்கினார்.

அவற்றைப் பொறுமையாகக் கேட்ட டேபர், அறக்கட்டளை கூட்டத்தில் நிதி திரட்டிக்கொள்வதற்குப் பேச வாய்ப்பளித்தார். நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்ட ஐடாவுக்கு மறுநாள் காலை ஒரு கடிதம் வந்தது. டேபரின் வீட்டில் பார்த்த முதியவர் ஷெல், அறக்கட்டளைக்குச் செல்லும் முன்பாகத் தன்னை ஒரு முறை பார்த்துச் செல்லும்படி எழுதியிருந்தார்.

ஷெல்லைப் பார்க்கச் சென்றார் ஐடா ஸ்கடர். ஐடாவும் டேபரும் முதல் நாள் பேசியதைக் குறிப்பிட்ட அவர், மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். வேலூரின் மக்கள்தொகை, ரயில்பாதை வசதி, மருத்துவமனை கட்டிடம் எப்படிக் கட்டப்படும் என்றெல்லாம் கேட்டார். ஐடாவின் பதில் ஷெல்லுக்குத் திருப்தியளிக்க, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் நீட்டினார் ஷெல். இன்ப அதிர்ச்சியில் இருந்த ஐடாவிடம், ‘‘என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார்’’ என்று கூறினார்.

தேவைக்கு அதிகமாகவே கிடைத்த பணத்துடன் இந்தியாவுக்கு புறப்பட ஐடா ஸ்கடர் தயாரானார். மீண்டும் ஷெல்லிடம் இருந்து ஐடாவுக்கு உதவி கிடைத்தது. மருத்துவமனைக்குத் தேவையான கருவிகள் அடங்கிய மரப்பெட்டி ஐடா புறப்படத் தயாரான கப்பலுக்கு வந்துசேர்ந்தது.

தொடங்கியது மருத்துவ சேவை

தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 ஜனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது.

அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த சமூகக் கட்டமைப்புகளை எப்படி உடைப்பது என்ற கவலையும் அவருக்கு இருந்தது. ஆண்டுதோறும் பயிற்சி பெற்ற செவிலியர்களை கிராமங்களுக்கு அனுப்பினால் நிலைமை மாறும் என்று நம்பினார். செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908-ல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.
மருத்துவப் பள்ளி

கோடை விடுமுறையில் அனைத்து மிஷனரிகளும் கொடைக்கானலில் ஒன்று கூடுவது வழக்கம். அப்படிக் கூடிய மிஷனரி டாக்டர்கள் மாநாட்டில் ‘தென்னகத்தில் பெண்களுக்கென்று ஒரு யூனியன் மருத்துவக் கல்லூரி வேண்டும்’ என்ற கருத்தை ஐடா ஸ்கடர் முன்வைத்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்ற ஏளன குரல்கள் எழுந்தன. மாநாட்டில் பங்கேற்ற பெண் டாக்டர்கள் ஆன்டா கூக்ளர், மக்ஃபெயில் ஆகிய இருவரும் ஐடாவுக்கு பக்கபலமாக இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் 15 கோடிப் பெண்கள் இருந்த இந்தியாவில் 150 பெண் மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.
       1914-ல் ஐடா நெடு விடுப்பில் அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915-ல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிய ஐடா ஸ்கடர், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் துரிதப்படுத்தினார். மருத்துவமனை கட்டிடம் கட்ட பத்து லட்சம் அமெரிக்க டாலர் பணம் தேவைப்பட்டது. பல இன்னல்களுக்கு இடையில் 1918-ல் டிப்ளமோ மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதி, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து கிடைத்தது.

முதல் 14 பேர்

எபி, கிருபம்மா, ஜெஸிலெட், லிஸி, நவமணி, லூஸி, தனம்மா, எலிசபெத், செஸிலியா, சோஃபி, தாய், கனகம், அன்னா, சாரம்மா ஆகிய 14 மாணவிகளுடன் முதல் ஆண்டு மருத்துவப் பள்ளி தொடங்கியது. 1918 ஆகஸ்ட் 12-ல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். அந்தக் காலத்தில் மற்ற ஏழு மருத்துவப் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் இல்லாதபோதும், அதற்கான சாத்தியங்களை ஐடா ஸ்கடர் ஏற்படுத்திக்கொடுத்தார்.

நான்கு ஆண்டுகள் கழித்து நடந்த தேர்வில் சென்னை மாகாண மருத்துவப் பள்ளிகளிலே யூனியன் மிஷனரி மருத்துவப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது. அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இன்று 100 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 1948-ல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் பலரும் அறிந்த வரலாறு.

‘முதல்’ சாதனை

‘‘உலக அளவில் தொழு நோயாளிகளுக்கு முதல் அறுவைசிகிச்சையை டாக்டர் பால் பிராண்ட் தலைமையிலான குழுவினர் இங்கு செய்தனர். 1950 இறுதியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் முதல் இதய அறுவைசிகிச்சையும் முதல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் இங்குதான் நடைபெற்றன. முதல் மூளை நரம்பியல் சிகிச்சைப் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டது.

     இங்கு படித்த பல மருத்துவர்கள் இந்தியாவின் முன்னணி மருத்துவர்களாக உள்ளனர். இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் விரும்பினால் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மிஷனரி மருத்துவமனைகளிலும் எங்கள் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

    கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதை எங்கள் அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். புற்றுநோய், விபத்து சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், குடல் சிகிச்சை பிரிவுகளில் உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் இதய வால்வுகளைச் சரிசெய்யும் சிகிச்சையும் இங்குதான் செய்யப்படுகிறது” என்கிறார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அன்னா புளிமூடு.

32
சாரா டக்கர் கல்லூரி-1895

WIKIPEDIA
சாரா டக்கர் கல்லூரி (Sarah Tucker College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இதுவே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ஆகும். இங்கிலாந்தின் சாரா டக்கர் மற்றும் அவரது நண்பர்கள் பணத்தைத் திரட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவைப்படும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாக இதை தோற்றுவித்தனர். இதன் பின்னர் சாரா டக்கர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது, இது 1895 இல் ஒரு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இசபெல்லா தோபர்ன் கல்லூரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பழமையான கல்லூரி இதுவாகும் . இன்று இது ஒரு முதுகலை நிறுவனமாக உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆய்வகங்கள், நூலகம், கணினி மையம், விளையாட்டு அரங்கு போன்றவை உள்ளன. கல்லூரியில் ஐந்து விடுதிகள் உள்ளன. இதில் சுமார் 600 மாணவிகள் தங்கியுள்ளனர்.

     நிறுவனர் வரலாறு
இந்திய மிஷனெரி சங்கத்தின் செயலராக சென்னையில் பணியாற்றிய ஜான்தக்கர் அவர்களின் சகோதரி சாரா தக்கர். ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து வருத்தப்பட்டு எழுதிய கடிதம் இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சகோதரியும், மாற்று திறனாளியும், பதினான்கு வயது நிரம்பியவருமான சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த அன்றைய சமுதாய பெண்கள் கல்வி கற்க உதவிகள் தேவை என்பதை அறிந்த அவர், இருகால்களும் ஊனமுற்ற நிலையிலும் அவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்ததோடு அதற்கு பண உதவி செய்ய தன்னுடைய 24 பவுன் நகைகள் மற்றும் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடமும் நகைகள் வசூலித்து அவரது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய கல்வி கற்பிக்க, ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள். அவ்வாறு சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் திருநெல்வேலி மாவட்டம், கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. கடாட்சபுரம் சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 1895ல் சாராள தக்கர் பெண்கள் கல்லூரி 40 புள்ளி 61 ஏக்கர் ஏக்கர் 61 ஏக்கர் ஏக்கர் பரப்பளவில் தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. தன்னால் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் பல முறைகள் பணம் அனுப்பி லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்ற உதவிய சாராள் தக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.மேலும் இந்தியாவிற்கு நேரில் வந்ததும் இல்லை

1857ம் வருஷம் சாராள் தக்கர் மறைந்தாலும் அவர் முன்னெடுத்த பணிகளை அவரின் தோழிகளான மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் போன்றவர்கள் தொடர்ந்து செய்ததன் மூலம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளியை 1858ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. இப்படியாக பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி ஆகும்.

      கல்லூரி வரலாறு
1895ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாநகரத்தில் நான்கு மாணவிகளுடன் இந்த மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி இரண்டாம் நிலை கல்லூரியாக கருதப்பட்டது. 1927ஆம் ஆண்டு இயற்கை அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் பொருளாதாரம் படிப்புகள் இணைக்கப்பட்டன. இரண்டாம் நிலை கல்லூரியிலிருந்து முதல் நிலைக்கு 1939 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. 1942ஆம் ஆண்டு தமிழ் பாடத்திட்டமும் 1962 ஆம் ஆண்டு உயிரியல் இளங்கலை பட்டமும் 1961ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிப்பும் அதற்கு அடுத்த ஆண்டு தாவரவியல் படிப்பும் தொடங்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இணைக்கப்பட்டது. 1968 ஆண்டுகளில் இயற்பியல் படிப்பு தொடங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களில் முதுகலை படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1979ஆம் ஆண்டு இயற்பியலும் 1985 ஆம் ஆண்டு பொருளாதாரமும் 1986ம் ஆண்டு வேதியியலும் 1987 ஆம் ஆண்டு கணிதமும் முதுகலை படிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சுய நிதி படிப்புகள் தொடங்கப்பட்டது.1990 ம் ஆண்டு இந்தக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்றப்பட்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திட்டம் இளங்கலைப் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வருடாவருடம் சுயநிதி பாடப் பிரிவில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் பி++ தரமதிப்பீடு இந்த கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அறிவியல் நிறைஞர் படிப்பும் முனைவர் பட்டப் படிப்பும் இக்கல்லூரியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் பொருளாதாரம் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவினால் இக் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி பிரிவுகள் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாறு இந்த கல்லூரி பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரம் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, அறிவியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்பித்து வருகிறது. இந்தக் கல்லூரியின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கல்வி கற்று தங்கள் வாழ்வில் உயர்ந்து வருகின்றனர்.

        வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

        முனைவர் படிப்புகள்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், வேதியியல் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் என மொத்தம் 6 பிரிவுகளில் முனைவர் பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

        நிறைஞர் படிப்புகள்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் மற்றும் வேதியியல் என மொத்தம் 3 பிரிவுகளில் நிறைஞர் பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

        முதுகலை படிப்புகள்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் கணினி அறிவியல் மற்றும் உணவியல் என மொத்தம் 11 கலை, அறிவியல் மற்றும் பொருளாதார பிரிவுகளில் முதுகலை பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

        இளநிலைப் படிப்புகள்
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் கணினி அறிவியல், கணிணி பயன்பாடு, உணவியல் மற்றும் நுண் அறிவியல் என மொத்தம் 15 பிரிவுகளில் இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

        சேவைகள்
மாணவிகளின் கல்வி முன்னேற்றம் மட்டுமின்றி தனிப்பட்ட ஆர்வம், தனி நபர் மேலாண்மை போன்றவற்றையும் ஊக்குவிப்பதற்காக இந்த கல்லூரியால் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.வங்கிப் பணிகள் மற்றும் அரசு பணிகளில் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு மாணவிகளின் தனி வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கெடுக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத்திறமை, தொடர்பு கொள்ளும் திறமை, மொழியறிவு அதிகரித்தல் என தனிநபர் மேலாண்மைக்கான செயல்பாடுகள் அனைத்திற்கும் குழு அமைக்கப்பட்டு மாணவிகளின் பங்கெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பிற்கு பின்பான வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்காக வேலைவாய்ப்பு மையமும் கல்லூரியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது் 15க்கும் மேற்பட்ட அரசு உதவித் தொகைகள் சரியான மாணவிகளுக்கு சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 முதல் 1500 வரையிலான மாணவிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளும் இந்த கல்லூரியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

33.
Isabella Thoburn College
The Isabella Thoburn College, formerly the Lucknow Women's College and often called informally IT College, is a college for women in Lucknow, India, named after its founder, Isabella Thoburn, the first woman American missionary of the Methodist Episcopal Church to sail in India 1869. The college was established in 1870 with just six girls on roll.
      History
The origin of the college was in a school for girls opened by Isabella Thoburn on 18 April 1870 in one room in the city-centre bazaar of Aminabad. There were then just six girls. By 1871, the school had expanded and moved to occupy a house named Lal Bagh, which had been lived in by the treasurer of the last Nawab of Awadh.

On 12 July 1886 Miss Thoburn's school was renamed as the Lucknow Women's College and began to teach Fine Arts classes under the supervision of the University of Calcutta. In 1894, this connection was abandoned in favour of a new one with Allahabad University. Following the death of Miss Thoburn in 1901, the College, still at Lal Bagh, was given its present name in her honour. In 1923, it moved to the Chand Bagh estate of almost 32 acres, where it has remained until the present day.[1] Chand Bagh means "Moon Garden". The property was once a royal garden. After its affiliation to Lucknow University it found requisite support and guidance from Nirmal Chandra Chaturvedi, a renowned educationist and member of the university Executive Council.

The college's Principal Sarah Chakko (1905–1954) was the first woman president of the World Council of Churches.
        Present day
The College is now affiliated to Lucknow University. The buildings it has developed on the Chand Bagh campus since the 1920s include student hostels, lecture rooms, laboratories, a library, a college chapel and a large hall.[1] The college teaches five undergraduate courses, leading to the degrees of Bachelor of Arts (BA), Bachelor of Education (BEd), Bachelor of Science (BSc), Bachelor of Commerce (BCom), and Bachelor of Library and Information Science (BLISc). There are also postgraduate courses leading to the degrees of Master of Arts (MA), Master of Science(MSc), Master of Business Administration (MBA) and Postgraduate Diploma in Healthcare & Hospital Management (PGDHHM).


On 12 April 2012 the Government of India issued a new five rupee postage stamp illustrating the College.

Principals
Isabella Thoburn
Sarah Chakko
Dr. Eva Shipstone
Dr. Kamala D. Edwards
Ms. Mary Abraham
Dr. Adella Paul
Dr. E. S. Charles
Dr. Primrose H. Bodhan
Mrs. K. Sen
Dr. Vinita Prakash (Present)
     Notable alumni
Nabia Abbott (31 January 1897 – 15 October 1981), Islamic scholar, papyrologist, paleographer at the University of Chicago Oriental Institute
Lilavati Singh (December 14, 1868 – May 9, 1909), educator, also taught at the college
Martha Chen (born 1944), American academic, lecturer in public policy at the Harvard Kennedy School
Rashid Jahan (1905–1952), Urdu Writer.
Isha Basant Joshi (born 1908), first female officer of the Indian Administrative Service and writer, also known by the pen name Easha Joshi
Attia Hosain (1913–1998), feminist author and broadcaster
Ismat Chugtai (August 1915 – 24 October 1991), eminent Indian writer in Urdu[9]
Vijayaraje Scindia (1919–2001), politician, consort of the last ruling Maharaja of Gwalior
Qurratulain Hyder (1928–2007), novelist
Bina Rai (1936–2009), actress
Ma Prem Usha (1937-2008), clairvoyant and columnist
Priya Bhatia, eminent teaching personality
Dr. Mohini Giri, first chairperson of National Commission for Women in India
Late Mumtaz Jahan Haider, founder principal of Women's College in Aligarh
Dr. Crystal David John, studied and taught Economics (was the head of the Department of Economics) and currently the Head of the Department of Economics at Stella Maris College, Chennai
Vartika Singh - model, Femina Miss India Grand International 2015 and Miss Grand International 2015–2nd Runner Up.
Nivedita Bhattacharya, theatre and television actress

   See also
Methodist High School, Kanpur

34.
This is a list of Christian Colleges and Universities in India:

1.Hindustan Institute of Technology and Science
2.St. Anthony's College
3.St. Dominic's College
4.St. Xavier's College of Education, Hindupur
5.St. Edmund's College, Shillong
6.Saint Mary's College (Shillong)
7.Xavier University Bhubaneswar
8.Karunya University
9.Assam Don Bosco University
10.Japfü Christian College, Nagaland
11.Model Christian College, Kohima
12.Christ University
13.Eastern Christian College, Dimapur
14.Madras Christian College
15.St. Stephen's College, Delhi
16.Mar Baselios Christian College of Engineering and Technology, Kuttikanam
17.St Joseph College of Communication
18.Bankura Christian College
19.Christ Church College, Kanpur
20.Hislop College
21.Scottish Church College the oldest one present in the country being above 200yrs
22.St. John's College, Agra
23.St. Paul's Cathedral Mission College
24.Wilson College, Mumbai
25.Women's Christian College, Kolkata
26.CMS College Kottayam
27.Malabar Christian College
28.Scott Christian College
29.Amal Jyothi College of Engineering Kanjirappally
30.Amala Institute of Medical Sciences
31.Assumption College, Changanasserry
32.Bharata Mata College
33.Bishop Agniswamy College of Education
34.Christ College, Irinjalakuda
35.Christ Junior College
37.De Paul Institute of Science & Technology
38.Devagiri College, Kozhikode
39.Divyadaan: Salesian Institute of Philosophy, Nashik
40.DMI College of Engineering
41.Don Bosco Community College, Dindigul
42.Don Bosco Institute of Technology, Mumbai
43.Father Muller Medical College
44.Fatima Mata National College
45.Holy Cross College, Agartala
46.Holy Cross College, Tiruchirapalli
47.Idhaya Engineering College for Women
48.St. Joseph's College, Irinjalakuda
49.Jesus and Mary College
50.Jubilee Mission Medical College and Research Institute
51.Jyothi Engineering College, Cheruthuruthy, Thrissur
52.Little Flower College
53.Little Flower Junior College
54.Loreto College, Kolkata
55.Malankara Catholic College, Mariagiri
56.Malankara Orthodox Syrian Church Medical College, Kolenchery
57.Mar Athanasios College for Advanced Studies, Tiruvalla
58.Mar Baselios College of Engineering and Technology
59.Mar Baselios Institute of Technology, Anchal
60.Mar Ivanios College
61.Marian College Kuttikkanam
62.Marian Engineering College
63.Mary Matha Arts & Science College
65.Morning Star College
66.Mount Carmel College, Bangalore
67.Newman College, Thodupuzha
68.Nirmala College, Muvattupuzha
69.Nirmala College, Ranchi
70.Nirmala College for Women
71.Nirmalagiri College
72.Patrician College
73.Pope John Paul II College of Education
74.Prajyothi Niketan College
75.Pushpagiri Medical College
76.Sacred Heart College Chalakudy
77.Sacred Heart College, Thevara
78.Sacred Heart HSS Thiruvambady
79.Sahrdaya College of Engineering and Technology
80.St. Agnes PU College, Mangalore
81.St. Albert's College
82.St. Andrew’s College of Arts, Science and Commerce
83.St. Dominic's College
84.St. Mary's College, Thrissur
85.St. Mary's Higher Secondary School, Pattom, Trivandrum
86.St. Teresa's College
87.St. Thomas College, Thrissur
88.Salesian College, Darjeeling
89.Sarvodaya Vidyalaya, Trivandrum
90.Sophia College for Women
91.St Claret College, Ziro
92.St Francis College for Women
93.St John's College, Anchal
94.St. Aloysius College, Thrissur
95.St. Berchmans College
96.St. Francis Institute of Management and Research
97.St. John's Medical College
98.St. Joseph's College for Women, Alappuzha
99.St. Joseph's College of Engineering and Technology, Palai
100.St. Joseph's College, Moolamattom
101.St. Pius X College, Rajapuram
102.St. Thomas College, Palai
103.St. Xavier's College of Engineering
104.Stella Maris College, Chennai
105.Stella Matutina College of Education
106.Vimal Jyothi Engineering College
107.Vimala College
108.Viswajyothi College of Engineering and Technology
109.Xavier Institute of Social Service
110.Andhra Loyola College
111.Andhra Loyola Institute of Engineering and Technology
112.Arul Anandar College, Karumathur
113.Jnana-Deepa Vidyapeeth
114.Loyola College of Education, Chennai
115.Loyola College of Social Sciences
116.Loyola College, Chennai
117.Loyola College, Mettala
118.Loyola Degree College, Manvi
119.Loyola Institute of Business Administration
120.Loyola Institute of Technology and Science, Thovalai
121.Loyola Technical Institute, Madurai
122.Loyola-ICAM College of Engineering and Technology
123.North Bengal St. Xavier's College
124.St. Aloysius College (Mangalore)
125.St. Joseph's College of Commerce
126.St. Joseph's College, Bangalore
127.St Joseph's College, Darjeeling
128.St. Joseph's College, Tiruchirappalli
129.St. Joseph's Institute of Management
130.St Paul's College, Goa
131.St. Xavier's College, Mumbai
132.St. Xavier's College, Ranchi
133.St. Xavier's Technical Institute
134.St. Joseph's College, Hassan
135.St. Joseph's Evening College, Bangalore
136.St. Joseph's Institute of Management, Bangalore
137.St. Vincent College of Commerce
138.St. Xavier's College of Education
139.St. Xavier's College, Burdwan
140.St. Xavier's College, Dumka
141.St. Xavier's College, Kolkata
142.St. Xavier's College, Nevta
143.St. Xavier's College, Palayamkottai
144.St. Xavier's College, Patna
145.St. Xavier's College, Simdega
146.St. Xavier's College, Thumba
147.St. Xavier's Institute of Education
148.St. Xaviers College, Jaipur
149.Xavier Institute of Business Administration
150.Xavier Institute of Development Action and Studies
151.Xavier Institute of Engineering
152.Xavier Institute of Management & Research
153.Xavier Institute of Management, Bhubaneswar
154.Xavier University, Bhubaneswar
155.XLRI - Xavier School of Management
156.Alphonsa College Thiruvambady
157.Baselios Poulose Second College
158.Berchmans Institute of Management Studies
159.Bishop Heber College
160.Bishop Moore College
161.BPC College Piravom
162.Catholicate College Pathanamthitta
163.Christian Medical College & Hospital
164.Church Missionary Society College High School
165.CSI College of Engineering
166.CSI Institute of Technology
167.Fr. Conceicao Rodrigues College of Engineering
168.Henry Baker College
169.Higher and Technical Institute of Mizoram
170.Jyoti Nivas College, Bangalore
171.Kodaikanal Christian College
172.Mar Athanasius College of Engineering
173.Mar Gregorios College Punnapra
174.Mar Theophilos Training College, Trivandrum
174.Mar Thoma College
175.Mount Zion College of Engineering and Technology
176.Navajyothi College Kannikkalam
177.Nesamony Memorial Christian College
178.Pazhassi Raja College, Pulpally, Bathery
179.Albertian Institute of Management
180.Sarah Tucker College
181.Sathyabama University
182.Senate of Serampore College (University)
183.St. Thomas College of Teacher Education, Pala
184.St. Thomas College, Kozhencherry
185.St. Vincent D E Paul Degree College
186.Voorhees College (India)
187.Women's Christian College, Chennai
188.Christian Medical College, Ludhiana
189.Martin Luther Christian University
190.School of Law, Christ University
191.Don Bosco College, Tura

No comments:

Post a Comment